அன்பான தோழி !
நான் நலம் , நீ நலமா ?
இன்று உன்னுடைய பிறந்தநாள்!! எங்கள் அனைவரினதும் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !!
ஒவ்வொரு முறையும் நான் அனுப்பிய வாழ்த்துகளின் பின்னணியில் உன்னை எப்போது சந்திக்கப் போகிறேன் என்ற ஏக்கம் இருக்கும். சந்திப்பேனா என்ற கவலை மிஞ்சியிருக்கும். ஏன் என்றால் சந்திக்க கூடிய சூழலில் நான் இல்லை.
ஆனால் இப்போது எல்லாம் சர்ரியாகிவிட்டது. கிரீன் கார்ட் கிடைத்து பிரயாணப்படக் கூடிய தகுதி கிடைத்துப்விட்டது. எனக்கு கிரீன் கார்ட் கிடைத்த அக்டோபர் 30ம் திகதி தீர்மானித்தது உன்னை சர்ப்பரைஸாக தான் வந்து சந்திப்பது. அதுவும் இந்த பிறந்தநாளன்று வருவது என்று தீர்மானித்து அதுவரை கிரீன்கார்ட் கிடைத்தது பற்றி தெரிவிக்காமல் இருப்பது என்று. விசா எல்லாம் கிடைச்சிருந்தால் இன்று உன் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றிருப்பேன். உனக்கு ஞாபகம் இருக்க வேண்டும் சமீபத்தில் உன்னிடம் உன்னுடைய வீட்டு முகவரி கேட்டது. விசா விண்ணப்பப்படிவத்தில் எங்கே தங்கி நிற்பாய் என்று கேட்டால் கொடுக்க வேண்டுமென்பதற்காக. நீ தரவில்லை. அமேசனில் ஆர்டர் கொடுத்த முகவரியை தேடி எடுத்தேன். எல்லாம் சப்மிட் பண்ணினாலும் கிடைக்க வில்லை . வேலை இல்லை. வருமானம் காட்டமுடியவில்லை.எல்லாம் நல்லபடியாக முடிந்திருந்தால் இன்று இந்த நொடி உன் வீட்டில் இருந்திருப்பேன். பரவாயில்லை...இன்னும் காலம் இருக்கு. ஏதோ ஒரு நாள் உன் முன்னால் வந்து நிற்பேன்...சொல்லாமல் கொள்ளாமல்... :)
அதுவரை என்றைக்கும் நிலைத்திருக்கும் நினைவுகளுடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளடி ..!!
அன்புடன்
நான்!!


No comments:
Post a Comment