இனிய தோழிக்கு....!!
நலம் நலமறிந்தேன்...மகிழ்ச்சி!!
உங்கள் இருவருக்கும் , நமது மனம் நிறைந்த இனிய இரண்டாவது திருமணநாள் நல்வாழ்த்துகள்..!! (என்ன முழிக்கிறாய்??)
உனக்கு எத்தனையோ திருமண நாட்கள் கடந்திருக்கலாம் , ஆனால் அத்தனை வருடங்களிலும் நான் உன்னோடில்லை...நீயும் என்னோடில்லை...அதனால் உன்னை திரும்ப சந்தித்த பின் நான் மனதாரா வாழ்த்தக் கிடைத்த இரண்டாவது வருட திருமணநாள் என்பதால் என்னைப் பொறுத்தவரை இது இரண்டாம் ஆண்டுப் பூர்த்தி தான்...!! :)
மனம் நினைத்த வாழ்வு , மனமொத்த கணவன் வாய்க்கும் போது தான் ஒரு பெண்ணுக்கு கை கூடும். நினைவொன்றாய், நிழல் தொடர்வாய், கரம் பிடித்த கணம் தொட்டு கடையாழ் நிலை வரும் வரை உயிரொன்றாய் உடலிரண்டாய் வாழும் வாழ்கை தான் பரிபூரண தாம்பத்யம் என்றாகும், இந்த வகையில் என் தோழியை கரம் பற்றிய அதிர்ஷ்டத்தால் கணமொவ்வொன்றும் காதலாக , வயதானா நினைவு மட்டும் செலக்டிவ் அம்னீஷியாவாக வாழும் அதிர்ஷ்டசாலியான என் அன்பான அண்ணருக்கும், வரமாக கிடைத்த கணவனை தவமின்றி பெற்ற பாக்கியவதியான என் உயிர் தோழி சிவசோதிக்கும் எங்கள் மனம் நிறைந்த ஆசீர்வாதங்களும், அன்பும், நல்வாழ்த்துகளும் உங்கள் இருவரின் மணநாள் ஆண்டுப் பூர்த்தியான இந்நன்னாளில் உரித்தாகுக..!!
இன்று போல் என்றும் இணைபிரியா அன்றில் பறவைகளாய்
அன்புடனும் அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் இல்வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்,
அன்புடன்
சாந்தா , தேவன்
அஷ்வா & அச்சுதன்
அம்மா மற்றும் யாவரும்
No comments:
Post a Comment